மனலையிலிருந்து 10 கன்டெய்னர்கள் அமோனியம் நைட்ரேட் நாளை ஐதராபாத் அனுப்பப்பட உள்ளது.
பேரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை துறைமுகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்ட 740 டன் அமோனியம் நைட்ரேட் இருப்பது தெரியவந்தது. இதனை அப்புறப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்தது. இதனையடுத்து மின்னணு ஏலம் மூலம் அமோனியம் நைட்ரேட்டை விற்க முடிவு செய்யப்பட்டது. இன்நிலையில் தற்போது உள்ள 37 கன்டெய்னர்கள், அமோனியம் நைட்ரேட் யில் 10 கன்டெய்னர்களை ஹைதராபாத் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த 10 கண்டைனர் களும் நாளை பலத்த பாதுகாப்புடன் ஹைதராபாத் அனுப்பி வைக்கப்பட உள்ளன.