செல்போனை திருடியதாக இளம்பெண்ணை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று அடித்ததில் அவமானம் தாங்கமுடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் தான் நீஷு.. வயது 22 ஆகிறது.. இந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை மாலை செல்போன் கடைக்கு சென்றிருக்கிறார்.. இந்நிலையில் வீட்டுக்கு வந்த போலீசார் நிஷு செல்போனை திருடியுள்ளதாகவும், இது தொடர்பான காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதாகவும் கூறி அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
பின்னர் இரவு 10 மணிக்கு மேல் தான் போலீசார் நிஷுவை விடுவித்துள்ளனர்.. இதையடுத்து வீட்டுக்கு அழுது கொண்டே வந்த அந்தப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அப்பெண்ணின் தாயார் கூறுகையில், போலீசார் காவல் நிலையத்துக்கு எனது மகளை அழைத்து சென்று அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.. நாங்கள் எவ்வளவு சொல்லியும் விடுவிக்கவில்லை, பின்னர் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய பின்னர் தான் விடுவித்தனர்.
எனது மகள் மீது எந்த தவறுமில்லை, போலீசாரின் துன்புறுத்தல் காரணமாக அவமானமடைந்து மன அழுத்தம் ஏற்பட்டு விரக்தியில் தற்கொலை செய்துவிட்டார்.. இதில் சம்மந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.. இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.