மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார் என பாஜக எம்பி மனோஜ் திவாரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சென்ற 2ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தனக்கு லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், பரிசோதனையின் முடிவில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அவர், முந்தைய நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அவருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 5ம் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பூமி பூஜையில் கூட அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டதாகவும், அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று நெகட்டிவ் உறுதி செய்யப்பட்டதாகவும் பாஜக எம்.பி மனோஜ் திவாரி ட்வீட் செய்துள்ளார்.