Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தனியாக இருந்த பெண்… வீட்டிலிருந்து வந்த மர்ம நபர்கள்… உள்ளே சென்று பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி..!!

சிவகாசி அருகே வீட்டில் தனியாகயிருந்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இருக்கும் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ மணிகண்டன். பட்டாசு தொழிலாளியான இவருக்கு பிரகதி மோகினி (24) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. இந்தநிலையில், நேற்று பிரகதி மோகினி வீட்டில் தனியாக இருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.. இந்த சம்பவம் பெரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடக்கும்போது கணவர் செல்வமணிகண்டன் வேலைக்கு சென்றிருந்த நிலையில், பிரகதியின் வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் வெளியே வந்ததைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து, அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பிரகதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு  தகவல்கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார், பிரகதியின் உடலைக் கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு முதல்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிலுள்ள பீரோ திறக்கப்பட்ட நிலையில் இருந்ததால், பணத்துக்காக கொலை நடந்துள்ளதா? அல்லது வேறு யாரேனும் கொன்றுவிட்டு பணத்துக்காக கொலை செய்யப்பட்டதுபோல் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |