Categories
மாநில செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்து பற்றிய புதிய தகவல்…!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த கோர விபத்துக்கு ஓடுதளத்தில் விமானத்தை தரையிறக்கவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

துபாயில் இருந்து கோழிக்கோட்டை அடுத்த கரிப்பூர் விமான நிலையத்திற்கு 190 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுதளம் 28 தரையிறக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது பெய்த கனமழையால் ஓடுதளம் 28 யை விமானியல் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இதையடுத்து உடனடியாக ஓடுதளம் 10  தரையிறக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஓடுதளம் 10 தரையிறக்க விமானம் திருப்பப்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக ஓடுதளத்தில் ஓடி  சுவரை உடைத்துக்கொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்து, கோர விபத்து நேரிட்டு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனிடையே விமானத்தை தரையிறக்கும் போதும்  விபத்து நிகழ்வதற்கு முன்னரும் விமானிகளின் உரையாடல் பதிவான, டிஜிட்டல் வாய்ஸ் ரெக்கார்ட் அடங்கிய கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டு ஆய்வு தொடங்கியுள்ளது.

இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானியான அகிலேஷ் குமாரின் உடல் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பலர் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா சிறப்பு விமானம் தரை இறங்கியது. அப்போது ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடி 3 துண்டுகளாக உடைந்தது. இதில் இரண்டு பைலட்கள் உட்பட  18 பேர் உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக,ஏர்  இந்தியா தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. படுகாயமடைத்தோருக்கு 2 லட்சம் ரூபாயும், சாதாரண காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையேவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |