கனடாவில் நள்ளிரவில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரொரன்ரோவில் உள்ள டுபண்ட் தெரு மற்றும் ஒஷிங்டன் அவென்யூ பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் மர்ம நபர் ஒருவர் அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பின் அப்பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டு, தாக்குதலை நடத்தியுள்ளார்.
அதன்பின் அப்பெண்ணின் வீட்டிலிருந்து ஒரு நொடிப் பொழுதுக்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி அப்பெண் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அதன் பின் புகார் அளித்த பெண்ணிடம் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அந்த நபர் கருப்பு நிறத்தில் சட்டை போன்ற உடையும் முகமூடியும் அணிந்திருந்தார் என அப்பெண் கூறியுள்ளார். தற்போது தப்பித்து சென்ற நபரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.