Categories
சென்னை மாவட்ட செய்திகள்

35 டன் ரேஷன் அரிசி கடத்தல்… துரத்தி சென்று மடக்கிய அதிகாரிகள்…!!

ஆம்பூர் அருகே 35 டன் ரேஷன் அரிசி உடன் இரண்டு லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குழிதகை என்ற இடத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் துணை வட்டாட்சியர் குமார் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூரிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்ய  முற்பட்ட போது, லாரி ஓட்டுநர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனை தொடர்ந்து வருவாய் துறையினர் லாரியை சோதனை மேற்கொண்டதில், ரேஷன் அரிசி கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடத்தப்பட்ட 18 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேலூரில் இருந்து ஆம்பூர் வழியாக  ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி லாரி மூலம் கடத்தி செல்வதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் துணை வட்டாட்சியர் குமார் மற்றும் நகர காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர், ஆம்பூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியை  துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் லாரியை சோதனை செய்தபோது, அதில் 17 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து  சம்பவம் குறித்து தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தப்பி ஓடிய இரண்டு லாரி ஓட்டுனர்களும் காவலர்கள் தேடி வருகிறார்கள்.

Categories

Tech |