Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேரலைகளால் அச்சுறுத்தல்… மீன்பிடி டோக்கன் கிடையாது…!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களுக்கு மீன் பிடிக்க செல்வதற்கான டோக்கன் வழங்கப்படாது என்று மீன்வளத் துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாகவும் குஜராத், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி கடற்கரை வரை காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தனுஷ்கோடி கடல் பகுதிகளில் சுமார் 3.5 முதல் 4 .6 மீட்டர் வரை பேரலைகள் எழக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு மீன்பிடி மற்றும்  கடலில் படகுகளில் வேலை பார்ப்பதற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும். ஒலிபெருக்கி மூலம் மீன்வளத்துறையால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கருத்தில் கொண்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளனர்.

Categories

Tech |