ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீசிய பலத்த சூறை காற்றால் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த சேதத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த சூறைக்காற்றுடன் பரவலாக பெய்து வரும் மழையினால்
கூமாபட்டி , ஒத்தக்கடை பகுதிகளில் உள்ள வாழைத்தோப்பில் அறுவடைக்கு தயாராக இருந்த, 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சூறை காற்றில் சிக்கி சாய்ந்தது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சேதத்தை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.