Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்… மின்சாரம் தாக்கி உயிரிழப்பு… !!

நாமக்கல் மாவட்டத்தில் 11 வயது சிறுவன் மின்கம்பம் வழியாக மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ரத்தீஷ் (11). இந்த சிறுவன் இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததால் சிறுவன் ரத்தீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், “இரண்டு தினங்களுக்கு மேலாக இங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மரக்கிளைகள் உரசி கொண்டிருந்ததால் மின்கம்பங்களில் மின் கசிவு ஏற்பட்டது. சிறுவன் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது மின்கம்பம் என்பதால் மின்சாரம் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டான். மாதம் ஒருமுறையாவது மின்கம்பங்களை முறையாக ஆய்வு செய்தால் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் விரைவில் இதனை சரிசெய்யும் பணியை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதன்பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |