சீனா இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது உயிரி தாக்குதலை நடத்த இருப்பதாக இந்தியாவின் ரா அமைப்பு எச்சரித்துள்ளது.
ஏற்கனவே உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதுக்கு காரணம் சீன நாட்டிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இன்று உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது இயற்கையாக நடந்த ஒரு விஷயமாக பார்க்கப்பட்டாலும், அவர்களின் உணவுப்பழக்கமே இதற்கு காரணமாக அமைந்திருப்பதால், மக்களுக்கு கோபம் என்பது ஏற்பட்டுள்ளது. அதேபோல்,
இதனை தொடர்ந்து சீனா நாடானது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் எல்லை பிரச்சனைகளிலும் அவ்வபோது ஈடுபடுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலாக, அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் மக்களுக்கு சீன முகவரியிலிருந்து மர்ம பார்சலில் விதைகள் வருகிறது. இது உயிரி ஆயுதமாக இருக்கலாம் எனவே அதைத் திறக்காமல் காவல்துறைக்கு தகவல் அளிக்க அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவிலும் இதே போன்ற பார்சல்கள் மக்களுக்கு வரலாம் அப்படி வரும் பட்சத்தில் மக்கள் அதனை திறக்காமல் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது சீனா உயிரி தாக்குதல் நடத்த உள்ளதாகவும் இந்தியாவின் ரா அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.