வேலை வாய்ப்பிற்கான இன்றைய பதிவு :
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் ஒரே தீர்வாக இருப்பதால் தொடர்ந்து அடுத்த அடுத்த கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கால் பலர் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வரும் இந்த சூழ்நிலையில், அவ்வபோது அரசு வேலை குறித்த அறிவிப்புகள் வெளியாக அதற்கும் படித்த இளைஞர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு WAQF BOARD துறையில் காலியாக உள்ள 4 சட்ட அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான மாத ஊதியம் ரூபாய் 40,000. வயது 65ற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் தங்கள் சுய விபரத்தை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு ஆகஸ்ட் 12 க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.waqf.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.