கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் சிக்காமல் தப்பித்தன பரபரப்பான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக வந்தே பாரத் என்னும் திட்டத்தின் மூலம் இந்தியர்கள் தொடர்ந்து சொந்த நாடுகளுக்கு விமானம் மூலம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்தது. அதன்படி தொடர்ந்து விமானத்தின் மூலம் இந்தியர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி வந்தனர். அந்த வகையில்,
இரு தினங்களுக்கு முன் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது பலரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விமானத்தில் ஆப்சல் என்ற இளைஞர் பயணிக்க இருந்தார். ஆனால் ஏர்போர்ட்டில் அபராதம் கட்டுவது தொடர்பாக 5 நிமிடம் தாமதமானதால் விமானத்தை தவற விட்டதாகவும், அதன் பிறகு விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.