உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கர்னல் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் தான் அகமது ஹாசன். இவர் தன்னுடைய மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே கோபத்துடன் சென்றார்.. பின்னர் நீண்ட நேரமாகியும் கணவர் வீட்டுக்கு வராததையடுத்து, குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.. புகாரின் பேரில் போலீசார் பல இடங்களில் தேட தொடங்கினர்.
அப்போது, போலீசார் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலத்தை கண்டுபிடித்தனர். அதனை பார்க்கும்போது காணாமல் போனவருடன் சில ஒற்றுமைகள் இருந்ததால், போலீசார் அது ஹாசனின் சடலம் தானா என்பதை உறுதிப்படுத்த அவருடைய குடும்பத்தினரை அழைத்து வந்தனர்.. சடலத்தை பார்த்த அவரது மனைவி மற்றும் சகோதரர்கள் அதை பார்த்து உறுதி செய்தனர்.
இதையடுத்து, குடும்பத்தினர் ஆகஸ்ட் 5ஆம் தேதி நல்லபடியாக அடக்கம் செய்து இறுதிச்சடங்கை நடத்தினர். அவரது பிரிவால் குடும்பத்தினர் சோகத்தில் அமர்ந்திருந்த நிலையில், 2 நாள்களுக்கு பிறகு ஹசான் வீட்டின் கதவைதட்டியுள்ளார்.. வீடு பூட்டப்பட்டு இருந்தால் செய்வதறியாமல் திகைத்து நின்ற ஹாசனை அடையாளம் கண்ட அக்கம்,பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் காவல் நிலையத்திற்கு ஹாசனை அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டிலிருந்து சண்டைபோட்டுவிட்டு புறப்பட்ட வழியில் ஒருவரை சந்தித்து அவரின் உதவியின் மூலம் தொழிற்சாலை ஒன்றில் சில நாள்கள் வேலை பார்த்த ஹாசன், சம்பளத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளது தெரியவந்தது.