தந்தை ஒருவர் தனது பத்து வயது மகனை தலைகீழாக கட்டிவைத்து மிகவும் கொடூரமாக தாக்கிய காணொளி சமூகவலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சேர்ந்த குட்டு கான் என்பவரது மகன் சில பொருட்களைத் திருடி சென்று விற்று அதற்கு தின்பண்டங்கள் வாங்கியுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குட்டு கானின் மனைவி அவருடன் தகராறு செய்து விட்டு பிரிந்து சென்றதால் கடும் கோபத்தில் இருந்த அவர், தற்போது மகன் செய்த காரியத்தை நினைத்தும் ஆத்திரம் கொண்டு பெற்ற மகன் என்று கூடக் கருதாமல் தலைகீழாக தொங்கவிட்டு கடுமையாக தாக்கியதோடு சிறுவன் மீது கொதிக்கும் தண்ணீரையும் ஊற்றி உள்ளார். தற்போது இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/zY7knE_qIlE