மேஷ ராசி அன்பர்களே …! இன்று சந்தோஷம் நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். செயல்களில் உற்சாகம் பிரதிபலிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாகவே இருக்கும். பிள்ளைகளின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியல்வாதிகள் நல்ல செயல்களால் புகழ்பெறுவார்கள். எல்லா நன்மைகளும் இன்று இருக்கும் வீண் அலைச்சல் குறையும். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சனையைக் கண்டு பயப்படாமல் இருப்பீர்கள்.
கோபமான பேச்சு டென்ஷன் போன்றவை குறையும். இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். மாணவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வியில் இருந்த பயம் விலகி செல்லும். இன்று எதையும் எதிர்பார்க்காமல் அன்பாக அனைவரிடமும் நடந்து கொள்வீர்கள்.
பரிபூரணமான சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பிரவுன் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் மற்றும் வெள்ளை நிறம்.