Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…வாக்குவாதங்களை தவிர்க்கவும்…ரகசியம் காப்பது அவசியம்…!

ரிஷப ராசி அன்பர்களே …!   இன்று எவரிடமும் பொது விஷயங்களை மட்டும் தயவு செய்து பேச வேண்டாம். கண்டிப்பாக உங்களுடைய ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். பணியில் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும். தொழில் வியாபார நடைமுறையில் தாமதம் இருக்கும். பணவரவை விட செலவு இருக்கும். தயவுசெய்து தேவையில்லாத பொருட்கள் மீது கவனம் செலுத்த வேண்டாம். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள். உடல் எடை கண்டிப்பாக பாதுகாத்திடுங்கள்.

குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு நல்ல மதிப்பு இருக்கும். அதே போல் எதிர்த்துப் பேசுவதை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள். வீட்டில் பிறரிடம் அன்பாக நடந்து கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. எவரிடமும் எதைப்பற்றியும் தயவுசெய்து பேசிக் கொண்டிருக்காமல் இருங்கள். மற்றவர்களுடைய  பிரச்சனைகளில் தயவுசெய்து தலையிட வேண்டாம்.

யாருக்கும் கருத்துக்கள், அறிவுரைகளும் ஏதும் கூற வேண்டாம். இன்று காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர்நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்.

Categories

Tech |