சிம்ம ராசி அன்பர்களே…! இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிரியினால் உருவான இடையூறுகளை சமயோசிதமாக சிந்தித்து செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவு அதிகரிக்கும். நிலுவைப்பணம் கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபமும் மிகவும் சிறப்பாக இருக்கும். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். திருமண முயற்சிகளுக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். சில விஷயங்களை மட்டும் கையாளும்போது பொறுமையும் நிதானமும் தேவைப்படும். மாலை நேரங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
முக்கியமான பணியை மேற்கொள்வது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்.