மீன ராசி அன்பர்களே…! இன்று புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் மிகுந்து காணப்படும். பெற்றோரின்ஆரோகியத்தில் கவனம் தேவை. வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பரிசு திட்டங்களை அறிவிக்க வேண்டும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்னைகள் தீரும். எதிர்பாராத பண வரவு இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் பிறக்கும்.
கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அவ்வப்போது சிறியதாக கோபம் தலைதூக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் கூடுமானவரை அன்பாக பேசுங்கள். பெரியோர்களின் ஆலோசனையுடன் காரியங்களில் எதிர்கொள்ளுங்கள் மிகச் சிறப்பாகவே நடக்கும். அதே போல புதிய முயற்சிகளில் கண்டிப்பாக தெளிவு வேண்டும். மனக்குழப்பங்கள் அவ்வப்போது வந்து செல்லும்.
காதலர்களுக்கு எந்த விதத்திலும் முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை இன்று நீங்கள் செய்யும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று திங்கட்கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.