இங்கிலாந்து நாட்டில் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 209 க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி போரிஸ் ஜான்சன் கூறுகையில், “’கொரோனா தொற்று காரணமாக சென்ற மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
இனிமேலும் பள்ளிகளை மூடுவது மாணவர்களுக்கு நல்லதல்ல. பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பான நடைமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். மாணவர்களின் பள்ளிப் படிப்பு என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இனி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் பள்ளிகள் மூடப்படுவது என்பது கடைசியாக இருக்கும். மாணவர்கள் தங்கள் பள்ளி கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும். எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.