Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியை போல ஆங்கிலத்தையும் கற்க வலியுறுத்துங்கள் – ப.சிதம்பரம்

விமான நிலையத்தில் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பேசும்போது நீங்கள் இந்தியர் தான் என ஒரு CISF அதிகாரி கேள்வி கேட்டார் என்று  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட திமுக எம்.பி கனிமொழி, இந்தி மொழித் தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இது பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது, சம்மந்தபட்ட அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசு பதவிக்கு செல்வோர் இந்தியைக் விரைவாக கற்பது போல் ஆங்கிலத்தையும் கற்க வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு அலுவல் மொழியாக கருதினால் ஊழியர்கள் இந்தியுடன் ஆங்கிலத்தையும் கற்க வலியுறுத்த வேண்டும். இந்தி அல்லாத பிறமொழி பேசும் நபர்கள் மத்திய அரசு பதவிக்கு செல்லும் போது விரைவாக இந்தி கற்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்கு நேரிட்ட அனுபவம் அசாதாரணமானது என மத்திய முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |