Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓட்டுக்கு பணம் கொடுப்பது குற்றம்” விளம்பர பலகை வைக்க கோரிய மனு தள்ளுபடி…

ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என விளம்பர பலகை வைக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக நடைபெறுவதாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Image result for தேர்தல் விழிப்புணர்வு

இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு பொதுமக்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்ப்பு அளித்து வருகின்றனர். இதில் வேட்பாளர்க்கு ஆர்த்தி தட்டு எடுப்பதும், பணம் கொடுப்பதும் போன்ற பல்வேறு புகார்கள் எழுந்து வருவதையடுத்து வழக்கறிஞர் சூர்யபிரகாசம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த்தார்.

அதில், ஆர்த்தி எடுக்க மற்றும் ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று தேர்தல் ஆணையம் விளம்பர பலகை வைக்கக் கோரி இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையத்தின் விளக்கங்களை கேட்டறிந்த நீதிமன்றம் ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என விளம்பர பலகை வைக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Categories

Tech |