Categories
இந்திய சினிமா சினிமா

இந்திய சினிமாவின் ஓர் அடையாளம்…. ரஜினியை வாழ்த்திய பிரபல நடிகர்…!!

நடிகர் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 45 ஆண்டு திரையுலக வாழ்விற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக, ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். பாலச்சந்தர் இயக்கிய “அபூர்வ ராகங்கள்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. அதன்பின்பே பல்வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்கிறார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதியுடன் ரஜினி திரையுலகிற்கு வந்து 45 வருடங்கள் ஆகின்றது. இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவரின் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தை நடத்திவருகின்றனர்.

மோகன்லால், மம்முட்டி, சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து ரஜினியின் 45 ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் ” 5 தசாப்தங்கள்! 45 வருடங்கள்! இந்திய சினிமாவின் ஓர் அடையாளம். நமது அன்பார்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 45 வருட திரைவாழ்க்கையில் முன்னிட்டு #45yearsOfRajinismCDP வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்துள்ள பங்கு மிகப் பெரியது. வாழ்த்துக்கள் சார் ” என மோகன்லால் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |