தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து சமீபத்தில் முடிவுகள் வெளியானது.. இதையடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, இந்த முறை அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்காமல், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. இதையடுத்து மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடங்களை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடைபெற உள்ளதால், இதற்கு விண்ணப்பித்த மாணவ -மாணவிகள் தங்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாளாகும். இதுவரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யாதவர்கள் www.tngasa.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..