மும்பை துறைமுகத்தில் 1000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது .
கடந்த சனிக்கிழமை மும்பை நவ சேனா துறைமுகத்திற்கு வந்த கப்பலில் துறைமுக அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்ட ஹெராயின் கைப்பற்றப்பட்டது இதை கைப்பற்றிய துறைமுக அதிகாரிகள் இதன் மொத்த மதிப்பு 1000 கோடி என்றும்,
191 கிலோ அளவிற்கு கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவித்தனர். ஆயுர்வேத மருந்து என்ற போர்வையில் மூங்கில் குச்சிக்குள் வைத்து கடத்தப்பட்ட ஹெராயின் குறித்து சுங்க மற்றும் துறைமுக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.