Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்த சம்பவம், அரசின் அலட்சியமே காரணம் – மீனவர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததை  தடுக்க முயன்ற மீனவர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் அலை திடீரென ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. தூண்டில் வளைவு அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக மீனவர்கள் போராடி வந்தும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் கடல் சீற்றத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் வருவதை மணல் மூட்டை அடுக்கி தடுக்க முயன்ற போது, வீட்டு சுற்றுசுவர் இடிந்து விழுந்து அஸ்வின் என்ற இளைஞன் உயிரிழந்தார்.

மேலும் இருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு 30 லட்சம்  ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் . குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இறந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து, மீனவர்கள் போராட்டம் நடத்தினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |