இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணியை தொடங்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, போரூர் சந்திப்பு மற்றும் பூந்தமல்லி புறவழி சாலைஇடையே 8 கிலோமீட்டர் தொலைவில் உயர்த்தப்பட்ட பாதையில் திட்டப்பணி செயல்படுத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்தது. விமான நிலையம் வண்ணாரப்பேட்டை வரை, முதல் வழித்தடத்திலும் , சென்ட்ரல் பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிந்து ரயில் சேவை தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாதவரம் சிப்காட், மாதவரம் சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம், பூந்தமல்லி ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 118 .9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 69,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகள் நடைபெறவுள்ளன. 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதில் 52 கிலோ மீட்டர் தொலைவுக்கான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கி, வரும் 2024, 2025 ஆண்டுகுள் முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணியை தொடங்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மோனோ ரயில் திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட வழித்தடத்தில், அதாவது, போரூர் சந்திப்பு மற்றும் பூந்தமல்லி புறவழி சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உயர்த்தப்பட்ட பாதையில், திட்டம் செயல்படுத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
சென்னை புறவழிச் சாலை சந்திப்பு, ராமச்சந்திரா மருத்துவமனை, ஐயப்பன்தாங்கல் பேருந்து, பனிமலை, காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முள்ளைத்தோட்டம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் பூந்தமல்லி புறவழி சாலை மற்றும் பூந்தமல்லியில் வரவிருக்கும் பணிமனையை இணைக்கும் வகையில் மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.