Categories
தேசிய செய்திகள்

பெய்ரூட் வெடி விபத்து… சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவி விலகல்…!!!

பெய்ரூட் வெடி விபத்திற்கு பொறுப்பேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் தற்போதுவரை 150க்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 6000க்கும் மேலானோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வெடி விபத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு பெய்ரூட் நகரம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. நீண்ட நாட்களாக துறைமுகத்தில் டன் கணக்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் தீப்பற்றி வெடி விபத்தே இந்த பேரழிவிற்கு காரணம். இந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் லெபனான் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டின் பிரதமர் ஹசன் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் சாலைகளில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில், லெபனான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மானல் அப்டெல் சமாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் லெபனான் மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து லெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் அமோனியம் நைட்ரேட் வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் லெபனான் நாட்டின் பிரதமர், கட்டார் இந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |