Categories
உலக செய்திகள்

2 வாரத்தில் 1,00,000 குழந்தைகள் பாதிப்பு…. பள்ளி திறக்கும் நிலையில் அலற விடும் கொரோனா….!!

அமெரிக்காவில் இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு லட்சம் சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி முதல் 30ஆம்  தேதி வரையில் 97,000 சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க குழந்தைகள் அகாடமி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தற்போது வரை ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3,38,000 சிறுவர் சிறுமியர் உள்ளடங்கியுள்ளனர். மேலும் கொரோனாவால் 1,62,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சில பள்ளிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளனர். மற்ற பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க உள்ளனர்.

இந்த சூழலில், இன்னும் அதிக குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதன் மூலமாக, அவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா பரவுமா என்பதை அறிய முடியும். தற்போது உள்ள சூழ்நிலையில் இது மிகவும் அவசியம் என்று Vanderbilit பல்கலைக் கழகத்தின் Dr.Tina Hartert கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு சூழலில், எப்படி சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பு நடத்துவது, எப்படி குழந்தைகளையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்வது என்ற பல்வேறு விவாதங்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலர்களுக்கு இடையே நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |