தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்து இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடன் இணைந்து நடிப்பதற்காக பல நடிகர் நடிகைகள் காத்திருக்கின்றனர். ரஜினி படையப்பா என்ற மெகா ஹிட் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் ரஜினியின் மகளை காதலிக்கும் கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடித்திருப்பார். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் நடிகர் விஜய்யை கே எஸ் ரவிக்குமார் யோசித்து வைத்திருந்தாராம். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவரால் அந்தப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.