சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் சரக்கு ரயில் ஓன்று அலுமினியம் ஏற்றிக் கொண்டு நேற்று இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு இரயில் கோங்யி நகர் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் இருந்த 6 பேர் சிக்கி மாயமாகினர்.
உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு சிக்கிய 4 பேரின் உடல்களை மீட்டனர். மேலும் மாயமான 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சரக்கு இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் இரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தினமும் அவ்வழியாக செல்லும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டன.