காஷ்மீரில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில், உத்திரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த சுபம் சிங் என்பவர் விமானப் படை வீரராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, தனது துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விமானப்படை வீரர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தற்போது வரை தெரியவில்லை. அதனால் இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.