இயன் பிஷப் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக விராட் கோலி மற்றும் பாபர் அஷாம் ஒப்பிட வேண்டியவர்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, ஸ்டிவ் ஸ்மித் , கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரின் கூட்டணி தான் இன்றைய கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கருத்துலகில் பாகிஸ்தானின் பாபர் அஷாம் பலரையும் சேர்த்துள்ளார். மே.இ தீவுகளின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இயன் பிஷப். இயன் பிஷப் தனது ஆரம்ப காலத்திலேயே சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசியிருக்கிறார். இவர் ஒரு டெரர் பவுலர். ஆனால் சச்சின் பயம் என்றால் என்னவென்று தெரியாத இளம் காளை. உலக அளவிற்கு மே.இ தீவுகளுக்கும் இடையே லார்ட்ஸில் நடைபெற்ற போட்டியில் இயன் பிஷப்பை கொஞ்சம் மேலேறி சச்சின் சிக்ஸ் அடித்தார்.இயன் பிஷப்பை அப்போதெல்லாம் இப்படி ஆடுவது கடினம் என்பதோடு மண்டைக்கு ஆபத்தான விஷயமும் கூட.
இந்நிலையில் ஜிம்பாப்வேயில் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மபமெல்லோ மபாங்வாவுடன் பேசிய இயன் பிஷப் கூறியதாவது” அதாவது நேராக ஆடுவது என்ற ஒரு விஷயத்தில், நான் சச்சின் டெண்டுல்கருக்கு பவுலிங் செய்தவன் என்ற முறையில் விராட் கோலி, பாபர் அஷாமை சச்சினுடன் ஒப்பிடுகிறேன், சச்சின் டெண்டுல்கர் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று நான் கருதுகிறேன். எப்பவும் சச்சின் நேராக ஆடுவார், நேர்கோட்டில் ஆடுவார். எனக்கு விராட்கோலியையும்,பாபர் அஸாமையும் பார்க்கும்போது அது தான் தோன்றுகிறது என்றார்”. மேலும் ஜஸ்பிரித் பும்ரா பற்றி கூறும்போது” பும்ரா என்றால் இந்த தலைமுறையின் திறமை, அனைத்து வடிவங்களுக்கும் ஏற்பது போல அவர் தன்னை மாற்றிக் கொள்வது அற்புதமான ஒரு திறமை. அதேபோல ராபாடாவும், தற்போது வேகப்பந்து வீச்சின் மறுமலர்ச்சி காலம்” என கூறியுள்ளார்.