Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…சிந்தனை மேலோங்கும்…ஒற்றுமை உண்டாகும்…!

மேஷ ராசி அன்பர்களே …!   இன்று புதிய சொத்துக்கள் அமையும். நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீட்டும் திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்லபடியாகவே நடக்கும். எடுத்துக்கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும்.

ஆயுதங்களை கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும் போதும் கொஞ்சம் எச்சரிக்கை வேண்டும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி கொள்ளுங்கள். உடலுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகும். ஆகையால் அதை பற்றி கவலை படாதீர்கள். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக தான் செயல்பட வேண்டும். இன்று எதையும் ஆலோசனை செய்து செய்யுங்கள்.

காதலர்களுக்கு எந்த விதத்திலும் ஒற்றுமை இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |