Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

” வெற்றிக்குப் பின் வீட்டிற்கு வீடு இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வேன் ” திமுக வேட்பாளர் உற்சாக வாக்குறுதி!!..

மக்களின் அனைத்து பிரச்சினைகளையும தீர்த்து வைப்பேன் ஆர்கே நகர் திமுக வேட்பாளர் உற்சாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மக்களவை தேர்தல் வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி அவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கூண்டார். பிரச்சார பயணத்தில் அவர் பேசியதாவது ,

வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டு தற்போது உங்கள் முன் வீடுவீடாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறேன் தற்போது வீடு வீடாக நான் வாக்கு சேகரிப்பது போல் வெற்றி பெற்றபின் எனது தொகுதியில் வீடு வீடாக சென்று பிரச்சினைகளைக் கேட்டறிந்து அனைத்து அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என்றும்,

மேலும் கல்வி வேலைவாய்ப்பு போன்றவைகளில் உள்ள பிரச்சனைகளுக்கு பிரச்சினைகளை கலைந்து அதற்கு உடனடியான தீர்வு மேற்கொள்வேன் என்றும் உங்கள் முன் உறுதியளிக்கிறேன் ஆகையால் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை மிகப் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என்று அந்த மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கண்ட வாக்குறுதிகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவை தேர்தலில் வேட்பாளர் கலாநிதி வீரசாமி அவர்கள் உற்சாகத்துடன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |