Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்….. “ரத்து கிடையாது” ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு….!!

ரயில் பயணம் குறித்த முக்கியத் தகவலை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பல  தளர்வுகளை ஏற்படுத்தி பல மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டித்துள்ளனர்.

இந்நிலையில் வருகிற செப்டம்பர் 30 வரை கொரோனாவை  கட்டுப்படுத்துவதற்காக, ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் தற்போது மறுப்பு தெரிவித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் 30ம் தேதி வரை பயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவல் தவறானது. மேலும் சிறப்பு ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

Categories

Tech |