கொத்தமல்லியின் மருத்துவகுணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
தமிழன் தான் கெத்து என்று நாம் அனைவரும் பெருமையாக வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டும். தமிழர்களின் சமையல் கலை நமது உடல் ஆரோக்கியத்தை எப்படி பேணி பாதுகாத்து வருகிறது என்பதை நாள்தோறும் அறிந்து வருகிறோம். ஒவ்வொரு உணவுப் பொருளிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் அடங்கியிருக்கும். இதுபோன்ற கண்டுபிடிப்புகளை அப்போதே தமிழர்கள் கண்டுபிடித்தது உலக நாடுகளிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில்,
கொத்தமல்லியின் மருத்துவ குணம் குறித்து இனி காண்போம். கொத்தமல்லி தழைகளை சமையலில் சேர்ப்பது வாசனைக்காக மட்டுமல்ல. ஆரோக்கியத்திற்கும் உதவும் என்பதால் தான். உப்புகள் சேர்வதால் உருவாகும் கல்லை ஆரம்ப நிலையிலேயே கரைக்கக்கூடியது கொத்தமல்லி. இதை உணவுடன் சேர்த்து உண்பதால் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வயிற்றுக்கோளாறு, செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
இதில் வயிற்றுப் பகுதியில் கல் உருவாகும் பிரச்சனையை இன்றைய தலைமுறையினர் பலர் சந்தித்து வருகின்றனர். அந்த கல்லை நீக்குவதற்கு பல லட்சம் கொடுத்து செலவழித்து சிகிச்சை மேற்கொள்கின்றனர். ஆனால் ரூ1 க்கும் குறைந்த செலவில் நாம் அன்றாடம் உணவில் சேர்த்து வரக்கூடிய கொத்தமல்லியை, ஒதுக்காமல் அதை நன்கு மென்று சாப்பிட்டாலே கல் தானாக கறையும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதேபோல் தற்போது உலகையே மிரட்டி வரும் கொரோனாவுக்கு மஞ்சள் தான் மிகச் சிறந்த எதிர்ப்பு சக்தியாக இருப்பதால், அதற்கான டிமெண்ட் தற்போது அதிகரித்துள்ளது. இதைவிட சிறந்த உதாரணம் வேண்டுமா? எனவே தமிழகத்தைப் பொருத்தவரையில் உணவுதான் மக்களுக்கு மருந்து.