கைது செய்ய வாரண்ட் இருப்பதாகக் கூறி பெண்ணை அழைத்து சென்று தவறாக நடந்துகொண்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்
அமெரிக்காவில் இருக்கும் ஹவுஸ்டன் பகுதியை சேர்ந்த லீ பாய்க்கின் என்ற காவலர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு நேரத்தில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இளம்பெண் ஒருவரை பார்த்து உன்னை கைது செய்வதற்கு என்னிடம் வாரண்டு உள்ளது அதனால் உனது வாகனத்தை விட்டு விட்டு என் வண்டியில் வந்து ஏறி விடு என கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் குழப்பத்துடன் காவலர் தானே அழைக்கிறார் என நம்பி அவருடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அப்பெண்ணை அழைத்து சென்ற காவலர் அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் உயர் காவல் அதிகாரிகளை சந்தித்து குறித்த காவலர் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரையடுத்து காவல்துறையினர் கைது செய்தனர். அதோடு அவருக்கு அனைத்து துறை சார்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.