சிம்ம ராசி அன்பர்களே…! இன்று பலவழிகளிலும் தனலாபம் உங்களுக்கு ஏற்படும். ருசியான நல்ல உணவை நீங்கள்உண்பிர்கள். அதிபர்களுக்கு இன்று வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பழைய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் இருக்கும். கிடைக்கும் பணத்தை வைத்து நிதியாக நீங்கள் பயன்படுத்துவீர்கள். தொழிலுக்கு உதவியும் செய்வீர்கள். வீண் அலைச்சல் ஏற்படலாம் அவசரப்படாமல் எதையும் செய்யுங்கள்.
நிதானம் இருந்தால் இன்றைய நாள் மிகப்பெரிய வெற்றி நிச்சயம் கிடைக்கும். எதிர்ப்புகள் ஓரளவு விலகி செல்லும். எல்லா வகையிலும் பண வரவு சீராகவே இருக்கும். நண்பர்கள் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கியே செல்லும். உற்றார் உறவினர்களின் ஆதரவு இருக்கும். குடும்பத்தாரிடம் எந்தவித வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள்.
சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.