விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று பெற்றோரின் ஆதரவால் பெருமை கூடும் நாளாக இருக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடந்து முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்த மனநிம்மதியும் அடைவீர்கள்.
தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியை சிறப்பாகவே செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை கிடைக்கப்பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் உங்களைத் தேடி வரும். நட்பால் ஆதாயம் தேடிக் கொள்வீர்கள். காதலில் வயபடக் கூடிய சூழலும் இருக்கும். மனக்குழப்பம் தீரும் நாளாக இருக்கும்.
காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீலம்.