தனுசு ராசி அன்பர்களே …! இன்று பணியில் இருந்த தொய்வு அகலும் நாளாக இருக்கும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். வீடு மாற்றம் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகி சென்று உங்கள் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். பல வகையிலும் நன்மையும் உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பணத்தட்டுப்பாடு நீங்கும். முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். அதேபோல காதலில் உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையே எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.