மீன ராசி அன்பர்களே…! இன்று உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள் ஆக இருக்கும். இல்லத்தில் அமைதி கூடும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொடுப்பார்கள். தனவரவு திருப்தியை கொடுக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கவனம் வேண்டும்.
எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். நட்பு ரீதியில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை கொடுக்கும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். இன்று காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சனை இல்லாமல் சுமுகமாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்துமுடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.