Categories
தேசிய செய்திகள்

“மக்களுக்கு எதிரான ஆட்சி”… பாஜகவை கண்டித்து போராட்டம்… டி.கே சிவக்குமார் தீவிரம்…!!

பா.ஜக அரசு மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வருகிறது. அதனால் இந்த அரசை எதிர்த்து காங்கிரஸ் அமைப்பு தீவிர போராட்டம் நடத்தும் என டி.கே சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரில், “இந்தியாவை பாதுகாப்போம்” என்ற பெயரில் பல்வேறு துறைசார்ந்த காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தப் போராட்டத்தில் டி.கே சிவகுமார் பேசியபோது, “நாட்டை பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தொழிலாளர்கள் தங்கள் அமைப்புகளுடன் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இதை நான் வரவேற்கிறேன். மேலும் கர்நாடகத்தில் பெருமளவு கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு மக்கள் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். மக்களிடம் பணம் இல்லை.

ஆயிரக்கணக்கான மக்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையிலும் கொரோனா பரிசோதனைக்கு வாங்கிய உபகரணங்களில் பல கோடி ரூபாயை அரசு ஊழல் செய்து இருக்கிறது. விவசாயிகளுக்கு எதிராக நிலச்சீர்திருத்த சட்டத்திருத்தம், ஏ பி எம் சி யில் சட்டத்திருத்தம் போன்றவற்றை செய்திருக்கிறது. இதன் காரணமாகதான் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கர்நாடக மாநிலம் பா.ஜனதா அரசு மக்களுக்கு விரோதமான ஆட்சியை நடத்தி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள்  மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அரசுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும். மக்கள் விரோத அரசுக்கு எதிராக ஒவ்வொரு தாலுகாவிலும் போராட்டம் நடத்தப்படும். விவசாயிகள் மற்றும் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து போராடவும் காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது”, இவ்வாறு அவர் கூறியுள்ளார் .

Categories

Tech |