இதையடுத்து இவரின் மகன் மற்றும் மகள் ஆகியோர் இவரை தனியாக விட்டு விட்டு விலகி ஈரோட்டிலுள்ள பாட்டி வீட்டுக்குச் சென்று விட்டனர்.. இதற்கிடையே, மனைவி உயிரிழந்த பிறகு தனக்கு ஆதரவில்லையே எனக் கூறி மதுவுக்கு அடிமையான சாமிநாதன் தன்னுடைய முதல் மனைவியின் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
ஆனால், முதல் மனைவியின் மகன் எந்த ஒரு வேலைக்கும் போகாமல் சாமிநாதனிடம் பணத்தைப் வாங்கிக்கொண்டு ஆடம்பரமாக செலவு செய்தபடி இருந்துள்ளார். இதனால் தனது மகனை அவர் அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.. அவர் கண்டித்தும் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடி அதிக செலவு செய்துவந்திருக்கிறார்.
இதனால் கடும் மன வேதனைக்கு உள்ளான சாமிநாதன் நேற்று மதியம் விஜயமங்கலம் அருகே புலவர்பாளையத்திலுள்ள தன்னுடைய தந்தை வீட்டுக்கு வந்துள்ளார்.. இதையடுத்து இரவு 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி சென்ற சாமிநாதன் அதன் பின்னர் இன்று காலை வரை வீட்டுக்கு வரவேயில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்து போன சாமிநாதனின் சகோதரர் சந்திரன், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.. அதனைத்தொடர்ந்து புலவர்பாளையம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் சாமிநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் வந்தது.
தகவலின் அடிப்படையில், உறவினர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது சாமிநாதன் வேப்பமரத்தில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பெருந்துறை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமிநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்கு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூலித்தொழிலாளி மன உளைச்சலில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.