சர்வதேச இளைஞர்கள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இளைஞர்கள் பற்றிய சிறிய சிறு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்பதான் அந்நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இத்தகைய வலிமை மிக்க இளைஞர்களை ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக, 1999 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞர்களின் வாழ்க்கை என்பது மதிப்புமிக்கது. அவர்களுடைய வயது என்பது எதையும் தூக்கி எறிந்து சாதிக்கக் கூடியது, என்ற விவேகானந்தரின் கூற்றுக்கு ஏற்ப, ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது.
ராணுவம், விளையாட்டு, தொழில்நுட்பம் , வியாபாரம் என அனைத்து துறைகளிலும் இவர்கள் சாதித்து வருகின்றனர். சாதனை இளைஞர்களுக்கு மத்தியில், சிலர் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் உபயோகிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிறார். இந்த தவறான பழக்கத்தால் இளைஞர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பமும் சமூகமும் பாதிக்கப்படுகிறது. ஒரு இளைஞன் தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேயம், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், பெரியவர்கள் மீது அன்பும் மரியாதையும் கொண்டிருந்தால், நாடு முன்னேறும் என்பதை உணர்ந்து, இளைஞர்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து வீடு மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவ, இந்நாளின் உறுதியேற்க வேண்டும் என்பது இந்நாளின் நோக்கமாகும்.