மழை குறைந்தும் வெள்ளம் வடியாததால் கேரளாவின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை நேற்றுமுதல் குறையத் துவங்கியது. இதனால் பல பகுதிகளில் தேங்கி காணப்பட்ட மழை வெள்ளம் வடியும் நிலை ஏற்பட்டது. பல பகுதிகளில் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பி கொண்டிருந்தாலும் கோட்டயம், ஆலப்புழா மாவட்டத்தில் மாவட்டங்களின் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி காணப்படுகிறது.
வீடுகளை சூழ்ந்தும், தெருக்களில் தண்ணீர் நிறைந்தும், காணப்படுவதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.