Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீக்குளிக்க முயன்ற விவசாயி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..!!!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வாலிபர் உட்பட இரண்டு பேர் மொபட்டில் வந்தனர். அவர்கள் ஒருவர் மொபட்டில் கொண்டு வரப்பட்ட பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் தீவிரமாக செயல்பட்டு தீக்குளித்ததை தடுத்தனர். மேலும் அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலையும் தீப்பெட்டியும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் உடலில் தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். இதனையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் குஜிலம்பாரை அருகே உள்ள உரல்உருட்டுபட்டியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பது தெரியவந்தது.

தீக்குளிக்க முயற்சி செய்த காரணம் குறித்து போலீசார் பழனிசாமி இடம் கேட்டறிந்தபோது, எனக்கு சொந்தமாக 1 ஏக்கர் 11 சென்ட் நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து வருகிறேன். எனது உறவினர்கள் போலி ஆவணம் தயாரித்து எனது நிலத்தை அவர்களின் பெயரில் பத்திரப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அதனால் எனது மகனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தேன். அப்போது, விரக்தியில் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.

Categories

Tech |