மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி ரீதியாக தற்போது நிலவ கூடிய சூழல்கள், கல்லூரிகள் திறப்பு தொடர்பான ஆலோசனைகள் குறித்து பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் கலந்துகொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே கல்லூரி இறுதியாண்டு தேர்வு திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதே நேரத்தில் கொரோனா காரணமாக வகுப்புகள் தொடங்குவது தாமதமாகும் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் பள்ளி கல்லூரிகள் வகுப்புகள் அனைத்தும் டிசம்பர் மாதம் வரை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.