Categories
உலக செய்திகள்

போதையில் சுயநினைவை இழந்த பெண்… வாழ்வே இருண்டு போன சோகம்…!!!

போதையில் சுயநினைவை  இழந்த பெண் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தனது இரு கண்களையும் தோண்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கரோலினாவை சேர்ந்த Kaylee Muthart(21) என்ற பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போதையில் இருந்த போது, என்ன செய்கிறோம் என்று அறியாமலே தனது இரு கண்களையும் தோண்டி கொண்டார். அதனை கண்ட நபர் ஒருவர் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதன்பிறகு Kaylee-க்கு நினைவு திரும்பியவுடன் தனது இரு கண்களும் பறிபோனதை அறிந்த அவர், தன் வாழ்வே முழுவதுமாக இருண்டு விட்டதாக வருத்தமடைந்துள்ளார். தற்போதுஅவருக்கு மாற்று பொய் கண்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் அதன் மூலமாக அவரால் பார்க்க இயலாது. மேலும் அந்த பொய் கண்கள், அவருக்கு கண்கள் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையும், கொஞ்சம் சுய நம்பிக்கையும்  கொடுக்கும் என்றாலும், கண்ணால் பார்க்க முடியாது என்ற சோகம் அவருக்குள் ஏற்பட்டுவிட்டது.

ஆனால் இந்த சம்பவத்திலும் ஒரு நல்லது நடந்துள்ளது. அது என்னவென்றால் அவர் போதைப்பொருள் பழக்கத்தை முழுவதுமாக நிறுத்தி விட்டார். மற்றொரு நல்ல காரியம் என்னவென்றால், அவரின் காதலர் Kaylee- யை மனதார ஏற்றுக் கொண்டதுடன், அவளுக்கு வேறு கண்கள் பொருத்தப்பட்டிருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது போல் உணர்வதாக Kaylee கூறியுள்ளார்.மேலும் பார்வையற்றோர் பயிற்சிப் பள்ளி ஒன்றிற்கு சென்று அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை தானாக செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டுள்ளார். அதே சமயத்தில் தன்னை வழி நடத்திச் செல்வதற்காக நாய் ஒன்றையும் விரைவில் வாங்க இருக்கிறார்.

Categories

Tech |