1.நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள்.
2. கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே, என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே. எதற்கும் பயப்படாதே, தயங்காதே, இலக்கை நோக்கி அடியெடுத்து வை.
3. தொடர்ந்து முன்னேறு சோதனைகள் விலகும், பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீர்வாய் அதை யாராலும் தடுக்க முடியாது.
4. போராடு, போராட்டத்தில் தான் ஞானம் பிறக்கும். போர்க்களத்தில் தான் கீதை பிறந்தது.
5. வேலையில் ஈடுபடுங்கள் அப்போது உங்களால் தாங்க முடியாத மகத்தான சக்தி உங்களுக்குள் வருவதை காண்பீர்கள்.
6. பிறருக்காக செய்யப்படுகின்ற சிறு வேலை கூட நமக்குள் இருக்கும் சக்தியை எழுப்ப வல்லது.
7. பிறர் நலத்தை பற்றி சிறிதளவு எனும் சித்திப்பதால் படிப்படியாக நமது உள்ளத்தில் சிங்கத்தைப் போன்ற பலம் உண்டாகிறது.
8. நீ பற்றற்று இரு, மற்றவை சேவை செய்யட்டும். மூளையின் பகுதிகள் வேலை செய்யட்டும் ஆனால் ஒரு அலை கூட மனதை வெல்ல இடம் கொடுக்காதே.